1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
2 இதற்காக மறு உத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.
3 நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
4 துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
5 அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?