5 காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
6 அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
7 அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
8 அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
9 காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
10 படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலே பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து பரம்படிக்குமோ?
11 அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?