1 நாளாகமம் 25:7-13 தமிழ்

7 கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.

8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

10 மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

11 நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

12 ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

13 ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,