1 நாளாகமம் 4:40-43 தமிழ்

40 நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.

41 பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.

42 சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,

43 அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.