1 நாளாகமம் 9:5-11 தமிழ்

5 சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,

6 சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.

7 பென்யமீன் புத்திரரில் அசெனூவாவின் குமாரனாகிய ஓதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.

8 எரோகாமின் குமாரன் இப்னெயா; மிக்கிரியின் குமாரனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் குமாரனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;

9 தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.

10 ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.

11 அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்கர்த்தன்.