எசேக்கியேல் 22:20-26 தமிழ்

20 வெள்ளியையும், பித்தளையையும், இரும்பையும், ஈயத்தையும், தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன்.

21 நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.

22 குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்து கொள்வீர்கள் என்றார்.

23 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

24 மனுபுத்திரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் பண்ணப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.

25 அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடுபண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.

26 அதின்ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனவீனம் பண்ணப்படுகிறேன்.