4 உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
5 உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.
6 அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.
7 புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
8 வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
9 கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
10 கீழ்த்திசையான பிராகாரத்துமதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.