13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.
14 பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
15 லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.
16 அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்ட பிரகாரம் அவர்களை எண்ணினான்.
17 லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
18 தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள்.
19 தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.