எண்ணாகமம் 7:1-7 தமிழ்

1 மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில்,

2 தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

3 தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

5 நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி. லேவியருக்கு அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.

6 அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.

7 இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.