நெகேமியா 7:60-66 தமிழ்

60 நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

61 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

62 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

63 ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரர்.

64 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

65 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

66 சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.