யோசுவா 13:2-8 தமிழ்

2 மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறுதுவக்கிக் கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,

3 காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,

4 தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,

5 கிப்லியரின் நாடும், சூரியோதயப்புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,

6 லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.

7 ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார்.

8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.