யோசுவா 19:27-33 தமிழ்

27 கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,

28 எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போகும்.

29 அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம் மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.

30 உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

31 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

32 ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.

33 நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம் மட்டும் போய், யோர்தானில் முடியும்.