29 மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார்.
31 அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.
32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
33 அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.