18 அது தும்முகையில் ஒளி, வீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.
19 அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
20 கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
21 அதின் சுவாசம் கரிகளைக்கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜூவாலை புறப்படும்.
22 அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் கூத்தாடும்.
23 அதின் உடற்கூறுகள், அசையாத கெட்டியாய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
24 அதின் நெஞ்சு கல்லைப்போலவும், ஏந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.