1 நாளாகமம் 2:26-32 தமிழ்

26 அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.

27 யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.

28 ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர் நாதாப், அபிசூர் என்பவர்கள்.

29 அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.

30 நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.

31 அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.

32 சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.