1 நாளாகமம் 9:27-33 தமிழ்

27 காவல் அவர்களுக்கு ஒப்புவித்திருந்தபடியால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இராத்தங்கியிருந்து, காலமே கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.

28 அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.

29 அவர்களில் சிலர் மற்றப் பணிமுட்டுகளின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மா, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, சுகந்தவர்க்கங்களின்மேலும் விசாரணைக்காரராயிருந்தார்கள்.

30 ஆசாரியரின் குமாரரில் சிலர் சுகந்தவர்க்கத்தால் பரிமளதைலம் இறக்குவார்கள்.

31 லேவியரில் கோராகியனான சல்லூமின் மூத்த குமாரனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது.

32 அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.

33 இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும் பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியதிருந்தபடியினால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.