2 சாமுவேல் 20:14-20 தமிழ்

14 அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.

15 அவர்கள் போய் பெத்மாக்காவாகிய ஆபேலிலே அவனை முற்றிக்கைபோட்டு, பட்டணத்திற்கு எதிராகத் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்; யோவாபோடே இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணினார்கள்.

16 அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்டவரச் சொல்லுங்கள் என்றாள்.

17 அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.

18 அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.

19 இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.

20 யோவாப் பிரதியுத்தரமாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாயிருப்பதாக.