எஸ்றா 2:2-8 தமிழ்

2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:

3 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

4 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

5 ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.

6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.

7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.

8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.