1 தெசலோனிக்கேயர் 5:14-20 தமிழ்

14 மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.

16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

17 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

20 தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.