எசேக்கியேல் 15:5-8 தமிழ்

5 இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?

6 ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

7 என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

8 அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.