சங்கீதம் 18:37-43 தமிழ்

37 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.

38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.என் பாதங்களின்கீழ் விழந்தார்கள்.

39 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.

40 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

41 அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.

42 நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.

43 ஜனங்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.