10 அவர்கள் கனியை பூமியிலிருந்தும் அவர்கள் வித்தை மனுபுத்திரரிலிருந்தும் ஒழிப்பீர்.
11 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
12 உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்கிறீர்.
13 கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம்.